Sunday, February 8, 2026

பொங்கல் பண்டிகைக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Related News

Latest News