கிருஷ்ணகிரியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிகல் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் மீது கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் 14 வயது சிறுவன் சுரேஷ் மற்றும் 5 வயது சிறுவன் தினேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால், கிராமத்தினர் தங்கள் வாகனத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே 14 வயது சிறுவன் சுரேஷ் உயிரிழந்தார். காயம் அடைந்த 5 வயது சிறுவன் தினேஷ் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெலமங்கலம் அதிமுக முக்கிய பிரமுகரின் கார் அதிவகமாக வந்ததால் விபத்து நேரிட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.