திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடைபெற்ற விழாவில், முன்னாள் மின்துறை அதிகாரியின் மனைவி உமா என்பவர் கழுத்தில் இருந்து 6 சவரன் தங்கச் சங்கிலி, ஜோதி என்ற மூதாட்டியின் 5 சவரன் தங்க சங்கிலி என 11 சவரன் நகை திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழா நடைபெற்ற இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தாமல், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் காரணமாகவே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.