சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் புகார் மனு

445
Advertisement

ரஷியா தொடர்ந்து அத்துமீறலாக உக்ரைன்மீது கடும் போர் செய்துவரும் நிலையில் , ராணுவ நடவடிக்கையையும் தாண்டி பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதை பல நாடுகளும் கண்டித்துள்ளன . தெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்கி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ரஷ்யராணுவம் உக்ரைனை ஆக்கிரமித்து இனப் படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த வாரம்மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.உண்மையில் நிலைமையின் தீவிரத்தை பார்க்கும் பொது இந்த மனு மீதான விசாரணை உடனடியாக எடுக்கப்படவேண்டும் என்பதே பிற நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .