கைவிரலையே வடிகட்டியாக மாற்றிய பெண்

74
Advertisement

கைவிரலையே வடிகட்டியாக மாற்றிப் பயன்படுத்தும் பெண்ணின் வீடியோ பெண்களைக் கவர்ந்து வருகிறது.

பெண்கள் இயல்பாகவே அழகுணர்வு உள்ளவர்கள். அதனால் எந்தவொரு பொருளையும் கலைக்கண்ணோட்டத்துடனேயே காண்பார்கள். அது இல்லமாக இருந்தாலும் சரி, உடுத்தும் ஆடையாக இருந்தாலும் சரி, பயன்படுத்தும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் சரி.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் இளம்பெண் ஒருத்தி தனது கை விரல் நகத்தில் மிகச்சிறிய வடிகட்டி ஒன்றைப் பயன்படும் விதத்தில் பொருத்திப் புதுமையைச் செய்துள்ளார்.

Advertisement

பொதுவாகப் பெண்கள் கைவிரல்களை அழகுபடுத்துவதில் ஆர்வம் மிக்கவர்கள். டிக்டாக் பிரபலமான இந்தப் பெண்ணோ தனது விரல்களைப் பல்வேறு விதங்களில் அழகுபடுத்தி அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அவரது வலைத்தளக் கணக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

புதுசு புதுசா…தினுசு தினுசா…கலக்குறாங்க பெண்கள்…