குழந்தைக்குப் பெயரிட  ரூ. 7.6 லட்சம் கொடுக்கும் பெற்றோர்கள் 

254
Advertisement

நிறையப் பேருக்குக் குழந்தை பிறந்தவுடன் வரும் குழப்பம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது தான். இதில் நிறையப் பெற்றோர் ஜாதக ரீதியாக  வைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஒருசிலர் தன் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயரோ அல்லது தங்கள் முன்னோர்களான தாத்தா ,பாட்டி இவர்களின் பெயர்களை வைப்பார்கள்.

அது சரி….  நாம் ,  இந்த முறைப்படி பெயர் வைக்கிறோம். வெளிநாட்டினர் எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என நினைத்ததுண்டா ? 

வாங்கப் பார்ப்போம் , வெளி நாடுகளில் பணக்கார பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட ரூ. 7.6 லட்சம் கொடுக்கிறார்கள் என்று தொழில்முறை குழந்தைக்குப் பெயர் வைப்பவர் ஒருவர்  கூறுகிறார்

https://www.instagram.com/p/CanInGflf_q/

ஒரு பெயர் வைக்க இவ்ளோ பெரிய தொகையா  என அதிர்ச்சியளிக்கிறது இதனைக் கேட்போர்களுக்கு. 

பல புதிய பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரைத் தீர்மானிப்பதில் சிரமப்படுகிறார்கள். எனவே, குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதை ஒரு தொழிலாகச் செய்ய நினைத்த பெண் ஒருவர்.இந்த தொழிலைக் கையில் எடுத்தார். 

நியூயார்க்கைச் சேர்ந்த 33 வயதான டெய்லர் ஏ ஹம்ப்ரி என்ற பெண் , வாடிக்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட இந்திய மதிப்பில் ரூ. 7.6 லட்சத்திற்கும் வரை அதிகமாகக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.தற்போது  ‘வாட்ஸ் இன் எ பேபி நேம்’ என்ற ஒரு கன்சல்டன்சியின்  நிறுவனர் ஆகா உள்ளார் இந்த பெண்.

https://www.instagram.com/reel/CVBpjPtl3tb/?utm_source=ig_embed&ig_rid=61c53376-a923-4a16-89d1-a8716f42e2c4

அவரின் இந்த  சேவைக்கு ரூ. 1.14 லட்சம் முதல் வசூலிக்கிறார். மேலும் வேலையைப் பொறுத்து விலைகள் உயரலாம்.கடந்த 2020 ஆம் ஆண்டில் இவர் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ளார்.இதற்காக இவர் பெற்ற தொகை இந்திய மதிப்பில்  1,14,16,125.00 ஆகும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.

https://www.instagram.com/reel/CbxyLcsJn-t/?utm_source=ig_web_copy_link

2015 இல் தொழில்முறை பெயர் வைபவராக மாறிய இவர் தொடக்கத்தில் , இலவசமாக இந்த சேவையை  வழங்கி வந்ததாகவும்.பின் 2018 ல் இந்த சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார் இந்த பெண். 

இவரை சமூக வலைத்தளத்தில் பின்தொடர்பவர்கள் இவரைபோலயே  ஆகவேண்டும் என தன் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.