எல். ஜி நிறுவனம் உலகின் முதல் 12 இன்ச் டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தியுள்ளது, Free – ஃபார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது என்பதால் இதனை நீட்டிக்கவோ ,மடிக்கவோ , சுருக்கவோ முடியும், இப்படி செய்தாலும் டிஸ்ப்ளேவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மிகவும் அதிகமான Stretchable திறன் கொண்ட உலகின் முதல் டிஸ்ப்ளேவாக இருக்கிறது,
காண்டாக்ட் லென்ஸ்களில் விசேஷமாக பயன்படுத்தப்படும் சிலிகானின் மூலப் பொருளை பயன்படுத்தி, இந்த Stretchable டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான லீனியர் வயர்டு சிஸ்டத்தைப் போன்று இல்லாமல், இதில் வளையும் தன்மை கொண்ட S-ஃபார்ம் ஸ்ப்ரிங் போன்ற புதிய வயர்டு சிஸ்டம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் அசல் வடிவத்தில் இருந்து 10 ஆயிரம் முறை மாற்றக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், திடமாகவும் இருக்கும்.
இதனை பல்வேறு விதமான துறைகளில் பயன்படுத்தி கொள்ளலாம், எனவே டிஸ்ப்ளே எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எல்ஜி விரைவில் தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.