ஃபிட்னஸில் கலக்கும் பேய்

175
Advertisement

பேய் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைராகி வருகிறது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சிகள் டெல்லியிலுள்ள ரோகினி பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் சில நாட்களாக வெளிப்புற ஜிம் உபகரணங்கள் தானாகவே இயங்கியுள்ளன.

Advertisement

அங்கு யாரும் மனிதர்கள் உடற்பயிற்சி செய்யாத நிலையில், தனியாக உபகரணங்கள் தனியாக ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர் பேய்கள்தான் உடற்பயிற்சி செய்கின்றன என்று கருதியுள்ளனர்.

உடனடியாக அவர்கள் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.
இதற்கிடையே வாட்ஸ் அப்பிலும் இந்தக் காட்சிகள் பரவத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினர்.

திறந்த வெளியிலுள்ள அந்த ஜிம் உபகரணங்களைப் போலீசார் உன்னிப்பாகக் கவனித்தனர்.

அப்போது ஜிம் உபகரணங்களில் அதிக கிரீஸ் தடவப்பட்டிருப்பதையும் அதன் காரணமாக அவை தானாகவே ஆடுதையும் கண்டுபிடித்தனர். இதனால் பேய்கள் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

பேய்களுக்கே உடம்பைப் பத்தி ரொம்ப அக்கறை இருக்கும்போது நான் ஏன் இன்னும் சோம்பேறியா இருக்கேன்னு ரொம்ப கவலையா இருந்துச்சி என்று இந்த சம்பவம் பற்றி இளைஞர்கள் வலைத்தளங்களில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர்.