கட்டாய Diet யில் இரு பாண்டாக்கள் – பூங்கா நிர்வாகம்

275
Advertisement

தைவான் மிருகக்காட்சிசாலை ஒன்றில் உள்ள இரண்டு கொழுத்த பாண்டாக்களுக்கு சிறப்பு உடல் எடை குறைப்பு உணவு மற்றும் உடற்பயற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தைபே மிருகக்காட்சிசாலையின் இரு பாண்டாக்கள் பருமனாக மாறிவருவதை கவனித்த பூங்கா நிர்வாகம் அவைகளின் இடையை குறைக்க , சிறப்பு எடை-குறைப்பு உணவு மற்றும் புதிய உடற்பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

யுவான் ஜாய் மற்றும் யுவான் பாவோ என்று அழைக்கப்படும் இந்த இரண்டு பெண் பாண்டாக்கள் , 2008 ஆம் ஆண்டு சீனா தைவானுக்கு பரிசளித்தது .

இதில் , ஒன்பது வயதான யுவான் ஜாய் ஏற்கனவே 115 கிலோகிராம்களில் தனது தந்தையைப் போலவே கனமாக இருக்கிறது , அதே நேரத்தில் ஒரு வயது ஆன தங்கை யுவான் பாவோ ஏற்கனவே 70 கிலோகிராம் எடையுடன் இருக்கிறது.

வயது வந்த பெண் பாண்டாவின் ஆரோக்கியமான எடை வரம்பு 105 முதல் 110 கிலோகிராம் வரை இருக்கும். அதிக எடை கொண்ட பாண்டாக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம், இது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில், இந்த இரு பாண்டாக்களும் ஆரோக்கியமாக இருப்பதாக தைபே உயிரியல் பூங்கா அறிக்கையில் தெரிவித்துள்ளது.