Saturday, July 12, 2025

YouTube வைத்த பெரிய ஆப்பு ! இனி இவர்களால் காசு பார்க்க முடியாது!

யூடியூப் இப்போது படைப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல புதிய மாற்றங்களை ஜூலை 15 2025 முதல் அமல்படுத்த இருக்கின்றது. இதன் மூலம் இனி வெட்டி ஓட்டும் சில யூடியூப் சேனல்கள் தனது வீடியோவின் மூலம் வருவாய் ஈட்ட முடியாது.ஏனெனில் சிலர் வேலையை குறைக்கவும் சோம்பேறித் தனத்தின் உச்சத்தாலும் வலைத்தளங்களில் இருந்தோ அல்லது ஏதேனும் ஒன்றில் யாரோ ஒருவர் பயன்படுத்திய உள்ளடக்கத்தையோ பயன்படுத்துவர்.அப்படி பட்டவர்களுக்கு தான் youtube இப்போது ஆப்பு வைத்திருக்கிறது.

என்ன விஷயமென்றால் ஒரே மாதிரியான வீடியோக்களையெல்லாம் வைத்து இனி கல்லா கட்ட முடியாது. அதாவது திரும்ப திரும்ப பதிவு பண்ண விடீயோக்களை பதிவு செய்ய முடியாது. விடியோக்களின் அசல் உள்ளடக்கத்திற்கு மட்டுமே மதிப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட content-ற்கு குறைந்த அளவே வருவாய் கிடைக்கும் என youtube கூறியிருக்கிறது.

மேலும் இந்த புதிய விதிமுறைகளில் மற்றவர்களது படைப்பை காப்புரிமை மீறி பயன்படுத்தும் நபர்களும் வருவாய் ஈட்ட முடியாது.முக்கியமாக ai-யால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தக்கூடாது.மேலும் இதில் தவிர்க்க முடியாத விஷயம் என்னவென்றால் படைப்பாளரின் பதிவில் அவரது குரல் மற்றும் தனிப்பட்டஅவரது visuals மற்றும் அறிவில் உதித்த புதிய யோசனைகள் மட்டுமே இருக்க வேண்டும்.இதைத் தவிர வேறு எந்த வெட்டியெடுக்கப்பட்ட நகலில் இருந்தும் வருவாய் ஈட்ட முடியாது.

இது மட்டுமல்லாமல் படைப்பாளர்களின் புதிய படைப்பு மற்றும் பயன் விளைவிக்ககூடிய தனித்தன்மை வாய்ந்த விடியோக்களுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கும்.

மேலும் முக்கியமாக உங்கள் channel வருமானம் ஈட்ட குறைந்ததது 1000 subscriber-களாவது இருக்க வேண்டும். மற்றும் இது வரை கடந்து போன 12 மாதங்களில் குறைந்தது 4,000 மணி நேரம் பயனாளர்கள் வீடியோக்களை பார்த்திருக்க வேண்டும்.

இந்த மாதிரியான புதிய மாற்றங்கள் நல்ல பயனுள்ள வீடியோக்களின் வருகை மற்றும் creative ஆன மூளைக்காரர்களின் திறமையை ஊக்குவிக்க youtube ஆல் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்.
இதில் முக்கியமாக பதிவுகளின் title பிறகு explanations,keywords இவையெல்லாம் முறையாக இருக்க வேண்டும்.
இனி வரும் நாட்களில் பள்ளி சார்ந்த கற்றல் அறிவுகளையும், புதிய விஷங்களை வெளி கொண்டு வரும் நபர்களுக்கு மட்டுமே வருமானம் வரும்.

மொத்தத்தில் youtube-இன் இந்த புதிய அம்சங்களை நன்கு மனதில் கொண்டு அதற்கேற்றவாறு உள்ளடக்கத்தை தயாரித்து சிந்தித்து செயல்படுவதே உங்கள் channel-ஐயும் வருமானத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news