திருவள்ளுர் அடுத்த கடம்பத்தூர் பகுதியில் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன ராஜ்கமல் என்ற இளைஞரை நாட்டு வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐந்து தனிப்படைகளை அமைத்து கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்
இந்த நிலையில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மறைந்திருந்த ஆறு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் தான் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை படுகொலை செய்தது தெரியவந்தது
இதனையடுத்து கடம்பத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த சீனிவாசன், அஷ்டலஷ்மி நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத், நாதன், என் எஸ் சி போஸ் தெருவை சேர்ந்த யுவன்ராஜ், புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் செஞ்சிபானம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நெல்சன் மற்றும் சிறுவன் உஸ்மான் உள்ளிட்ட 7 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து கொலை செய்ய காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்
இந்த விசாரணையில் கடம்பத்தூர் மேல்பகுதி இளைஞர்களுக்கும் கீழ்பகுதி இளைஞர்களுக்கும் இடையே யார் கெத்து என்ற போட்டி இருந்ததாகவும், இதில் நாங்கள் தான் கெத்து என நிரூபிப்பதற்காக youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நாட்டு வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் இளைஞரை கொலை தெரியவந்தது..இதனை கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்க போலீசார் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து,போலீசாரிடம் பயன்படுத்திய ஆயுதத்தை எடுத்து கொடுப்பதாக நடித்து தப்பித்து ஓடியபோது கொலைக்கு மூளையாக ஹரிபிரசாத், உள்பட 3 பேருக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு மாவு கட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
திருவள்ளூர் அருகே யார் கெத்து என்பதற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது