Wednesday, February 5, 2025

நடனமாடிய பெண்களுக்கு பணம் கொடுத்த இளைஞர் சுட்டுக்கொலை

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது மேடையில் பெண்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது 27 வயதான அஞ்சனி குமார் என்ற இளைஞர் மேடையில் இருந்த பெண்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

அப்போது மேடையில் கீழே இருந்த ஒரு நபர் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest news