Thursday, December 11, 2025

குறைந்த முன்பணத்தில் மாருதி எர்டிகாவை வாங்கலாம்.! எப்படி தெரியுமா?

ஜிஎஸ்டி விகிதத்திற்குப் பிறகு, மாருதி எர்டிகாவின் விலை குறைந்து உள்ளது. பேஸ் மாடல் விலை ரூ. 8.80 லட்சம் மற்றும் டாப் மாடல் ரூ. 12.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற 7-சீட்டர் காராக இது இருக்கிறது. முழு தொகையும் ஒரே நேரத்தில் செலுத்த வேண்டியதில்லை. ரூ. 1.5 லட்சம் முன்பணம் செலுத்தி, மீதமுள்ள ரூ. 8.5 லட்சம் கடனாக எடுக்கலாம். 5 வருட காலத்திற்கு மாதம் சுமார் ரூ. 17,655 EMI க்கான வசதி கிடைக்கிறது.

இன்ஜின் மற்றும் செயல்திறன்

மாருதி எர்டிகா 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இதன் பவர் 101.65 bhp மற்றும் டார்க் 136.8 Nm ஆகும். பெட்ரோல் மற்றும் CNG இரு வகைகளிலும் கிடைக்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. காரின் உள்ளே பரந்த இடவசதி மற்றும் சௌகரியமான இருக்கைகள் இருப்பதால் குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம்.

மாருதி எர்டிகாவின் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் எரிபொருள் செலவினை குறைக்க உதவுகிறது. மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியன் மற்றும் ரெனால்ட் டிரைபர் போன்ற 7-சீட்டர் வாகனங்களுடன் போட்டியிடக்கூடிய வாகனம் ஆகும். இது நம்பகமான பிராண்ட், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் உயர்ந்த மைலேஜ் ஆகியவற்றால் தனி இடம் பெற்றுள்ளது.

மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள மாருதி டீலர் நிலையத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

Related News

Latest News