Sunday, August 17, 2025
HTML tutorial

இந்தியாவில் 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் (X) கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சமூக ஊடக கணக்குகளை குறிவைத்து, இந்தியா கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இந்த 8000 எக்ஸ் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உத்தரவின்படி இந்த கணக்குகளை முடக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News