Sunday, February 23, 2025

மீண்டும் பெயர் பலகையில் இந்தி எழுதிய அதிகாரிகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் தார்பூசி அழித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் பெயர் பலகையை ரெயில்வே அதிகாரிகள் திருத்தி எழுதினர். மேலும் கருப்பு மையால் இந்தியை அழித்த 4 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Latest news