விஷத்தோட்டத்துக்குள்ள வரது Easy, போறது தான் கஷ்டம்

211
Advertisement

‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பார்கள். அதே போலத்தான், பசுமை எல்லாம் நன்மை இல்லை என இந்த தோட்டத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில், Northumberland பகுதியில் தான், உலகின் மிகவும் ஆபத்தான தோட்டம் உள்ளது.

100 வகையான கொடிய விஷச்செடிகளை கொண்டுள்ள இந்த தோட்டத்தில், அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதாக கின்னஸ் அங்கீகரித்துள்ள ரிசினும் இடம்பெற்றுள்ளது.

பார்ப்பதற்கே அமானுஷ்யமாக காட்சி அளிக்கும் நுழைவாயிலை கொண்டுள்ள இத்தோட்டத்திற்கு வருடந்தோறும் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர்.

அங்கு உள்ள சில செடிகளின்  வாசனையை நெருக்கமாக நுகரும் போதோ,  தொடும் போதோ மயக்கம் அல்லது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அதிகாரப்பூர்வ சுற்றுல்லா வழிகாட்டிகளுடன் மட்டுமே பயணிக்க சுற்றுலாவாசிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.