உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம்-கனவு நினைவானது! 

221
Advertisement

திரை படங்களில் நாம் கண்ட காட்சிகள் இப்போது நினைவாகியுள்ளது. ஆம் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த “ஏர்-ஒன் வெர்டிபோர்ட்”  எனப்படும் இந்த தளம்  ட்ரோன்கள், விமான டாக்சிகள், விமானங்கள் உள்ளிட்ட பறக்கும் வாகனங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்குவதற்கான மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெர்டிபோர்ட் “எலக்ட்ரிக் பறக்கும் வாகனங்களின் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) – ஏர் டாக்சிகள் – மற்றும் சரக்கு ட்ரோன்களுக்கான முழு செயல்பாட்டு மையத்தின் உலகின் முதல் முன்னோடியாக திகழும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இங்கிலாந்தின் கான்வென்ட்ரி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் , அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 200 க்கும் மேற்பட்ட எதிர்கால வெர்டிபோர்ட்டுகளுக்கான வரைபடமாக பார்க்கப்படும் என்று UK-ஐ தளமாகக் கொண்ட Air-One, Urban-Air Port இன் டெவலப்பர் கருத்து தெரிவித்துள்ளது.