‘மகளிர்’ உரிமைத்தொகை – பெண்களுக்கு ‘Good News’ சொன்ன CM

17வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரிசையாக எழுந்து தங்களது ஆதரவு, எதிர்ப்பை கூறி கருத்தை பதிவு செய்தனர். அந்த வரிசையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”புதிய ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. எதிர்க்கட்சியாக சில விமர்சனங்களை வைக்க விரும்புகிறேன்.

புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களுக்கு மாதாமாதம் 7ம் தேதி பணம் கொடுத்து வந்தோம். ஆனால் இந்தமாதம் இன்னும் வரவில்லை, நலத்திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றிபெற்ற பிறகாவது மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் பணிகளை செய்ய வேண்டும். முதல்வர் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் காத்திருக்கும் அனைவரையும் நீண்ட நாள் காத்திருக்க வைக்க வேண்டாம். மகளிருக்கு மாதம் ரூபாய் 2500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், தங்க செயின், மோதிரம்.. என தவெகவின் வாக்குறுதிகள் நீண்டு கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒரு சில வாக்குறுதிகளை கூட முதல் கையெழுத்தில் கொண்டுவரவில்லை. Instagramமில் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள் என கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், ”முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள் திட்டங்கள் தொடரும். தமிழ்நாட்டை ஆண்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசுகள் இந்த நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தீட்டிய திட்டங்கள் சமூக நீதிக்கு முன் உதாரணமாக திகழ்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், தவெக கட்சியின் கொள்கை தலைவர்களின் எண்ணங்கள் என இவற்றை மனதில் கொண்டு தவெக ஆட்சி நடைபெறும்,” என அறிவித்துள்ளார்.

Related News

Latest News