வாத்தைப்போல நடனமாடிய பெண்கள்

226
Advertisement

வாத்தைப்போல நடனமாடிய பெண்களின் வீடியோ
அனைவரையும் கவர்ந்துவருகிறது.

வித்தியாசமான, வேடிக்கையான வீடியோக்கள்
அனைவராலும் விரும்பப்படுகின்றன. அதனால்
அத்தகைய வீடியோக்கள் வலைத்தளங்களில்
வைரலாகிவிடுகின்றன.

அந்த வகையில் வாத்தைப்போல நடனமாடியுள்ள
இரண்டு பெண்களின் வீடியோ பலரையும் ஈர்த்து
வருகிறது.

இதுதொடர்பாக ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள
அந்த வீடியோவில் 2 பெண்கள் வாத்தைப்
போலவே நடனமாடிய காட்சி இடம்பெற்றுள்ளது.

ஏரிக்குள் ஒரு வாத்து சுற்றிவந்து நீந்துவதும்
துள்ளிக்குதிப்பதும் வேடிக்கையாக அமைந்துள்ளது.
அது உணவைத் தேடுவதும், தண்ணீருக்குள்
டைவ் அடிப்பதும் மனதை ரிலாக்ஸ் செய்யவைக்கிறது.

அந்த வாத்தின் செயல்களைப்போலவே 2 பெண்களும்
செய்தது சிரிப்பூட்டுவதாக அமைந்துள்ளது. ஸ்மாக்
மெக்ரேனர், மாலியா பேக்கர் ஆகிய 2 பெண்களும்
வாத்தைப்போல நடனமாடியது அனைவருக்கும்
சிரிப்பை வரவழைப்பதுடன் மனதைப் பதற்றத்தி
லிருந்தும் விடுவிக்கிறது.

பொதுவாக, செல்லப் பிராணிகளின் அன்றாடச்
செயல்களைப் பார்த்து ரசிப்பது ஒருவரின் மன
ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
அழகான பறவை அல்லது விலங்குகளின் செயல்கள்
மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து
அமைதிப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்களால்
நிரூபிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த
வீடியோ தற்போது காண்போரின் கவனத்தைப் பெரிதும்
ஈர்த்து வைரலாகி வருகிறது.