அடப்பாவமே… விமானத்தின் சீட்டை கழட்டிட்டு ஸ்டாண்டிங்கில் நிற்கவைத்த விமானம்

39
Advertisement

சீட் இல்லை ஸ்டாண்டிங்ல தான் போனும் அப்படினு பஸ்ல போறத பாத்துருப்போம், ஏன் இரயில் பயணத்தின் போதுகூட பாத்துப்போம், இதே.. விமானத்தில் போய் பாத்துருக்கீங்களா ?

டெய்சி மற்றும் அவரின் தோழிகள் விடுமுறையை கழிக்க சுற்றுலாச்செல்ல திட்டமிட்டனர்.இதற்காக ஈஸிஜெட் விமானத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.பயணநாளின், போர்டிங் பாஸ் வரை பெற்றுவிட்டு விமானத்தின் உள்ளே சென்றபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்து.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அங்கு இல்லை , அந்த இடம் காலியாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விமான ஊழியர்களை அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.விமானத்தில்  காலியாக உள்ள இடத்தில் அவர்கள் நின்றுகொண்டு இருகைக்காக காத்திருப்பதை வீடியோவாக எடுத்து தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் டெய்சி.

Advertisement

இதுகுறித்து விமான நிறுவனம் கூறுகையில்,கோடைகாலம் என்பதால்  விமானத்தின் சீட்டிங் அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில் டெய்சி மற்றும் அவரின் தோழிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பயணம் செய்தனர் என தெரிவித்துள்ளது.