சென்னையில் மீண்டும் விஜய் பிரசாரம்; எப்போ எங்கே தெரியுமா? முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். திருச்சி, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவர் மக்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

சென்னையில் தி.நகர், எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதிகளில் விஜய் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த அவர், பொதுமக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் திரளாக திரண்டனர். அவர் சென்ற இடமெல்லாம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாளை (18-ந்தேதி) விஜய் கடலூர் மற்றும் தர்மபுரி தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலூர் சென்று, அங்கு ‘ரோடு ஷோ’ மூலம் மக்களை சந்திக்கிறார். பின்னர் தர்மபுரிக்கு சென்று அங்கும் அதேபோல் பிரசாரம் நடத்துகிறார். அதன்பின் சென்னை திரும்புகிறார்.

19-ந்தேதி திருவள்ளூரில் சாலை மார்க்கமாக சென்று ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். 20-ந்தேதி சென்னை வில்லிவாக்கம், பெரம்பூர், அண்ணாநகர் மற்றும் தி.நகர் பகுதிகளில் மீண்டும் பிரசாரம் செய்கிறார். 21-ந்தேதி இறுதி நாளாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Related News

Latest News