UIDAI எச்சரிக்கை; ஜூன் 14 வரை இலவச ஆதார் அப்டேட்… அதிரடி அறிவிப்பு!! நோட் பண்ணிக்கோங்க…

10 ஆண்டுகள் கடந்த ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தும் நபர்களுக்கான முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காமல் வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அப்டேட் செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அப்டேட் சேவை ஜூன் 14 வரை முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் பின்னர், எந்த மாற்றத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, அரசு சேவைகள், வங்கி KYC செயல்முறைகள் மற்றும் நிதி உதவிகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க, உடனடியாக விவரங்களை சரிபார்த்து புதுப்பிப்பது நல்லது.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்திருந்தால், அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) ஆகியவற்றை மறுபடியும் அப்டேட் செய்வது மிகவும் முக்கியம். காலப்போக்கில் முக அமைப்பு, முகவரி போன்றவை மாறியிருக்கலாம். இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், ஆதாருடன் இணைக்கப்பட்ட பல சேவைகள் தடைபட வாய்ப்பு உள்ளது.

இந்த அப்டேட்டை ஆன்லைனில் செய்வது மிகவும் எளிதானது. அதிகாரப்பூர்வ myAadhaar இணையதளத்தில் சென்று, ஆதார் எண்ணை பயன்படுத்தி OTP மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் “ஆவண புதுப்பிப்பு” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, விவரங்களை சரிபார்த்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். ஆவணங்கள் தெளிவாகவும், சரியான பெயருடனும் இருக்க வேண்டும். அவற்றின் அளவு 2MB-க்கு குறைவாகவும், JPEG, PNG அல்லது PDF வடிவிலும் இருக்க வேண்டும்.

இறுதியாக “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்ததும், Service Request Number (SRN) கிடைக்கும். இதன் மூலம் அப்டேட் நிலையை கண்காணிக்கலாம். இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்தி, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எதிர்கால சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

Related News

Latest News