Sunday, August 31, 2025

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பிரதமர் மோடி பேச்சு

மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்துள்ளார். துர்காபூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஆளும் திரிணாமுல் அரசை அவர் கடுமையாக சாடினார்.

அப்போது அவர் பேசியதாவது : பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காளம் நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக மாறும். இது எனது நம்பிக்கை. ஆனால் திரிணாமுல், வங்காளத்தில் தொழில்மயமாக மாற்ற அனுமதிக்கவில்லை. எனவே, திரிணாமுல் வங்காளத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்போதும் கூட, திரிணாமுல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி பேசினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News