Thursday, December 25, 2025

பேருந்தில் பயணித்த பெண் போலீசிடம் நகை, செல்போன் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 45). இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் திருப்புவனத்தில் இருந்து மானாமதுரைக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். அப்போது அவருடைய பர்சில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News