மேற்கு வங்கத்தில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவரை பேராசிரியை திருமணம் செய்வது போன்ற வீடியோ, கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது.
இது உண்மையான திருமணம் இல்லை, பாடம் சார்ந்த விஷயம் என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்ல பேராசிரியை அறிவுறுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், மன உளைச்சல் காரணமாக பேராசிரியை தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.