துணி உலர்த்தும் மெஷினில் பருத்தி மிட்டாய் தயாரித்த பெண்மணி

501
Advertisement

துணி உலர்த்தும் மெஷினில் பருத்தி மிட்டாய் தயாரிக்கும் பெண்ணின் இணையத்தில் வைரலாகி வருகிறது.

துணி உலர்த்தும் எந்திரத்தில் பருத்தி மிட்டாய் தயாரிப்பது எப்படி என்பதை டாமி என்னும் பெண்மணி செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவில், வாஷிங் மெஷினின் டிரம்மில் டாமி அதிக அளவு சர்க்கரை சேர்க்கிறார். அதன் டிராயரில் திரவ சோப்பு ஊற்றும் பகுதியில் திரவ புளுபெரி சோடாவை ஊற்றுகிறார். பின்பு பருத்தி மிட்டாய் எவ்வாறு தயாராகிறது என்பதை விளக்குகிறார்.
பருத்தி மிட்டாய் தயாரானதும் அதனை எடுத்துக் காண்பிக்கிறார் டாமி.

மனதைக் கவரும் விநோதமான விஷயங்களுக்குப் புகலிடமாக சமூக ஊடகங்கள் இருந்தாலும், துணி உலர்த்தும் மெஷினில் பருத்தி மிட்டாய் தயாரித்த செயல் அதன் உச்சமாக அமைந்துள்ளது.