Thursday, July 3, 2025

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் ஒன்றின் பின் ஒன்றாக உயிரிழந்த சோகம்

ராஜஸ்தான் மாநிலம் கருளியில் 25 வயது பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதுஷ்டவசமாக 5 குழந்தைகளுக்கும் ஒன்றின்பின் ஒன்றாக உயிரிழந்தது.

திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த ரேஷ்மா-ஆஷ்க் தம்பதிக்கு சமீபத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் எனினும் தாய் நலமுடன் இருந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் ஜே.கே.லான் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் , 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் வழியிலேயே உயிரிழந்தது எனவும் மேலும் ஒரு பெண் குழந்தை ஜெய்ப்பூர் மருத்துவமனை அடைந்த பின் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news