ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் கரூரில் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல. வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
தோற்று விடுவோம் என்ற பயத்தில் இடைத்தேர்தலில் நிற்காமல் போகலாம். நாளையும் தோற்கத்தான் போகிறீர்கள். அதற்காக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடாமல் போவீர்களா என அதிமுக, பாஜகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.