தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரம்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் கடலோர கர்நாடகப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 5-ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News