தமிழக பெண்கள் கவனத்திற்கு! திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் திருமணமாகும் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் அண்ணன் சீராக வழங்கும் புதிய திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அண்ணன் சீர் திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவையை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை சமூக நலத்துறை தொடங்கியுள்ளது. இதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்க நாணயம் 8 கிராம் எடையுடன், 22 கேரட் மற்றும் 916 ஹால்மார்க் தரத்தில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழங்கப்படும் பட்டுப்புடவையில் சில்க் மார்க் மற்றும் ஹேண்ட்லூம் மார்க் ஆகிய தரச்சான்றுகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, டிசம்பர் மாத இறுதிக்குள் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகுதியுள்ள மணப்பெண்கள் திருமணத்தின்போது அண்ணன் சீராக இந்தப் பரிசுகளைப் பெற முடியும்.

Related News

Latest News