தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதி… இதுவரை எத்தனை கடைகளுக்கு சான்றிதழ் தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். இதில் முதலில் தீயணைப்புத்துறையின் சான்றிதழ் பெற்ற பின்னரே மற்ற துறைகளிடம் அனுமதி பெற முடியும்.

அந்த வகையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க தடையில்லா சான்றிதழ் கோரி தமிழகம் முழுவதும் இதுவரை 12,098 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.

இவற்றில் 10,244 விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேநேரத்தில், பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் 940 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 914 விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாக தீயணைப்புத்துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பதற்கான அனுமதி நடைமுறைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News