Sunday, July 27, 2025

”சும்மா சுர்ருன்னு இருக்கணும்” புதிய விதியை ‘அறிமுகம்’ செய்யும் ICC?

ரசிகர்கள் மத்தியில் T20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு, டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை. இதை மனதில் கொண்டு டெஸ்ட் தொடரில், புதிய விதியை அறிமுகம் செய்ய ICC திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் வழக்கம்போல 5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடைபெறும். வருமானம் குறைவாக உள்ள மற்றும் சிறிய நாடுகளில், 5 நாட்களுக்கு பதிலாக டெஸ்ட் போட்டி 4 நாட்கள்  நடைபெறும்.

இதனால் மிகச்சிறிய நாடுகளும் டெஸ்ட் தொடரை நடத்திட ஆர்வம் காட்டும். மொத்தமே 4 நாட்கள் தான் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது லார்ட்ஸ் மைதானத்தில் ICC உயர்மட்டக்குழு கூடி இந்த முடிவுகளை எடுத்துள்ளதாம். விரைவில் இதுகுறித்து ICC தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News