இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து வட தமிழகம், புதுச்சேரி பகுதியை அடைந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளைய தினம் (டிசம்பர் 6, 2025) பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
