₹10 லட்சம் FD வைத்தால் உண்மையிலேயே வருமான வரி நோட்டீஸ் வருமா?

இந்தியாவில் பாதுகாப்பான முதலீடு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வங்கிகளில் செயல்பட்டு வரும் வைப்புத்தொகைதான். சமீபகாலமாக ரூ.10 லட்சத்திற்கு மேல் FD வைத்தால் உடனடியாக வருமான வரித்துறை நோட்டீஸ் வரும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன

வருமான வரித்துறையின் விதிமுறைகளின்படி, ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த விவரத்தை வங்கி வரித்துறைக்கு தெரிவிக்கும் நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது. ஆனால். ரூ.10 லட்சம் FD வைத்தாலே உடனடியாக நோட்டீஸ் வரும் என்று நினைப்பது தவறு. உங்கள் வருமானமும், வங்கியில் செய்யப்படும் முதலீடும் பொருந்துகிறதா என்பதே முக்கியமான கேள்வி. இரண்டு தரவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தால் மட்டுமே வரித்துறை விளக்கம் கேட்கும் சூழ்நிலை உருவாகலாம்.

உதாரணமாக, ஒருவர் முறையாக வருமான வரி செலுத்தி வருபவராகவும் ,அல்லது சொத்து விற்பனை போன்ற சட்டபூர்வ ஆதாரம் வைத்திருப்பவராகவும் இருந்தால் பொதுவாக எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் வருமானம் குறித்து தெளிவான ஆதாரம் இல்லாமல் பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டால் மட்டுமே வரித்துறை கேள்வி எழுப்பும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே கூடுதல் வரி அல்லது அபராதம் விதிக்கப்படும். நேர்மையாக வருமானம் ஈட்டியவர்களுக்கு இதுபோன்ற கடுமையான வரி விகிதங்கள் பொதுவாக பொருந்தாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

Related News

Latest News