Thursday, May 22, 2025

ஜடேஜா, அஸ்வின், பதிரனா 12 பேரை ‘கழட்டிவிடும்’ CSK?

நடப்பு IPL சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் Nightmare ஆகவே மாறியுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள CSK அதில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கேப்டனை மாற்றியது, ஏகப்பட்ட இளம்வீரர்களை அணியில் சேர்த்தது என்று ஏகப்பட்ட முயற்சிகளை செய்தும் கூட, அதனால் எந்தவித புண்ணியமும் இல்லை.

இந்தநிலையில் 2026ம் ஆண்டு IPL தொடரில் மீண்டும் Comeback கொடுக்க, சிலபல வேலைகளை CSK முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் அணியில் இருந்து மொத்தம் 12 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோடி, ஜிம்மி ஓவர்டன், ராகுல் திரிபாதி, ஷ்ரேயஸ் கோபால், ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷித் ஆகியோர் தான் அந்த 12 வீரர்களாம்.

ஜடேஜாவும் இந்த லிஸ்டில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் இருவருமே மினி ஏலத்திற்கு வர வாய்ப்பிருப்பதால், அவர்களில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை திட்டமிட்டு உள்ளதாம்.

எனவேதான் மேற்கண்ட வீரர்களை அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், அன்ஷூல் கம்போஜ், நூர் அஹமது, சிவம் துபே, கலீல் அஹமது, சாம் கரண் மற்றும் தோனியை வைத்து அணியின் பிளேயிங் லெவனை கட்டமைக்க உள்ளனராம்.

Impact வீரரையும் சேர்த்து மீதமுள்ள 2 இடங்களுக்கான வீரர்களை, மினி ஏலத்தில் தரமாக வாங்கிட, CSK ஸ்கெட்ச் போட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்துடன் ட்ரேடிங் முறையில், பிற அணிகளில் உள்ள இளம்வீரர்களை வாங்குவதும் சென்னை அணியின் திட்டமாக உள்ளது.

மேற்கண்ட விஷயங்கள் சரியாக நடந்தால், 2026ம் ஆண்டு சென்னை அணி தன்னுடைய 6வது IPL கோப்பையை தட்டித் தூக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news