Thursday, December 18, 2025

BCCI ஓவர் ‘டார்ச்சர்’ ஓய்வு அறிவிக்கும் Bumrah?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்து ஷாக் கொடுத்தனர். தற்போது அந்த லிஸ்டில் பும்ராவும் இணையவிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர் பும்ரா. என்றாலும் அண்மை காலமாக Fitness இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு அதிக வேலைப்பளு தான் காரணம். குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரில், விக்கெட் தேவைப்பட்ட போதெல்லாம் பும்ரா தான் பந்து வீசினார்.

முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்டு வந்ததால், மீண்டும் அதுபோல காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பும்ரா இருக்கிறார். ஏனெனில் மறுபடியும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டால், அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமலே போகலாம்.

இதனால் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பதவியை, BCCI தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்தும் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் என்னால் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாது. 3 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாட முடியும் என்று, BCCIயிடமும் பும்ரா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டாராம்.

இதனால் மாற்று பந்துவீச்சாளர்களைத் தேடவேண்டிய கட்டாயத்தில் BCCI இருக்கிறது. இந்தநிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஓய்வு குறித்து பும்ரா பேசியிருக்கிறார். இதுபற்றி அவர், ” எனது உடல்நிலை எப்போது சோர்வடைகிறதோ, போதும் என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது உடனே ஓய்வு அறிவிப்பேன்.

தற்போது, நல்ல Fitness உடன், நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம்,” என்று பேசியிருக்கிறார். பும்ராவின் இந்த திடீர் பேச்சால் BCCI ஆடிப்போய் இருக்கிறதாம். இதையடுத்து அவரின் Fitnessக்குத் தேவையான விஷயங்களை, BCCI பார்த்துப் பார்த்து செய்து வருகிறதாம்.

Related News

Latest News