கோவை மாவட்டம், வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள உருளிகள் எஸ்டேட்டில் இன்று காலை வழக்கம்போல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வனப் பகுதியை விட்டு வெளியேறிய ஐந்து காட்டு யானைகள், தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. யானைகள் வருவதைப் பார்த்த தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
