கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூரில், தாயப்பா மற்றும் சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதி அருகே சுற்றுலா சென்றிருந்தனர்.
செல்ஃபி எடுக்கும்போது, மனைவி சின்னி திடீரென கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனடியாக உள்ளூர்வாசிகள் கயிறு கொண்டு அவரை மீட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தன்னை கொல்ல முயன்றதாக தாயப்பா தனது மனைவி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.