Monday, August 18, 2025
HTML tutorial

கணவன் பிரிந்து சென்றதால் 12 வது மாடியில் இருந்து குதித்த மனைவி

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் யுதிஸ்திரன், என்பவருக்கு மருத்துவரான ஜோதிஸ்வரி (30) என்பவருடன் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

யுதிஸ்திரன் மது மட்டுமின்றி மற்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையானதால் தொடந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் யுதிஸ்திரன் கடந்த மூன்று மாதங்களாக மனைவி விட்டு பிறிந்து ராமநாதபுரத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று தாம்பரம் ,பெருங்களத்தூரில் உள்ள தனது சகோதரி முத்துலட்சுமி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த ஜோதிஸ்வரி, கணவன் பிரிந்து சென்றதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் உடல் சிதைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,

தகவல் அறிந்து வந்த பீர்கன்காரனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கணவனிடம் விசாரித்து வருகின்றனர். மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டித்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News