வெட்டப்பட்ட ஆப்பிள் வாடுவது ஏன்?

457
Advertisement

ஆப்பிளைத் துண்டுதுண்டாக நறுக்கியதும் கரிய நிறத்தை
அடைந்துவிடுகிறது- ஏன் தெரியுமா?

ஆப்பிளை வெட்டிய பத்து நிமிடங்களுக்குள் அந்தத் துண்டுகள்
சிறிது கருமையாகவோ பிரௌன் நிறமாகவோ மாறிவிடுகிறது.
இதற்குக் காரணம் ஆக்ஸிஜன்தான்.

ஆப்பிளை நறுக்கும்போது அதிலுள்ள திசுக்கள் வெட்டப்படும்.
உடனடியாகக் காற்றிலுள்ள ஆக்ஸிஜன், வெட்டப்பட்ட துண்டுகளில்
தங்கிவிடும். ஆப்பிள் துண்டுகளில் குளோரோ பிளாஸ்ட் என்னும்
திரவம் உள்ளது. இந்த திரவம்தான் இலைகளின் பச்சை நிறத்துக்கும்
காரணமாகும்.

இந்த திரவத்தில் பாலி பினால் ஆக்ஸிடைஸ் என்சைம் என்கிற
மூலப்பொருள் உள்ளது. இவையிரண்டும் எதிர்வினையாற்றி
(ரியாக்சன்) குயினோன் என்கிற புதுப்பொருளை உருவாக்குகின்றன.
இதன்காரணமாக ஆப்பிள் துண்டுகள் சில நிமிடங்களிலேயே நிறம்
மாறிவிடுகிறது.

இப்படி நிறம் மாறுவதையும் தடுக்க முடியும்.

ஆப்பிள் துண்டுகள்மீது சர்க்கரை கலந்த நீர் அல்லது உப்பு
கலந்த நீரைத் தெளிப்பதன்மூலம் நிறம் மாறுவதைத் தடுக்கலாம்.
பைனாப்பிள் பழச்சாறை ஆப்பிள் துண்டுகளின்மீது தெளிப்பதன்மூலமும்
நிறம் மாறாமல் தவிர்க்கலாம். வெந்நீரில் நனைத்தாலும் ஆப்பிள்
துண்டுகள் நிறம் மாறாது.

எனினும், ஆப்பிளின் சுவை சிறிது மாறிவிடக்கூடும்.
நிறம் மாறிய ஆப்பிளைத் தின்பதால் உடலுக்கு எந்த ஆபத்தும் இல்லை.