யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது?

383
Advertisement

அண்மை காலங்களில் மேம்பட்ட உடல் நலனுக்காக அனைவரும் நெய்யை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

நெய் சாப்பிடுவதால் இதய, கண் மற்றும் சரும ஆரோக்கியம், சீரான செரிமானம், நியாபக சக்தி அதிகரிப்பு ஆகிய பல நல்ல பலன்கள் கிடைத்தாலும், யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நெய் செரிமானம் ஆவது சற்று கடினம் என்பதால், நாள்பட்ட வயிற்று கோளாறு உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் மற்றும் சளி இருக்கும் போது நெய் சாப்பிடக்கூடாது.

ஏற்கனவே உடல் எடை அதிகம் உள்ள கர்ப்பிணி பெண்கள், நெய்யை மிகவும் குறைந்த அளவிலேயே எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களும் நெய் சேர்த்து கொள்ளக்கூடாது என ஆயுர்வேத மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.