யார் இந்த ரத்தீஷ்? சட்டசபையில் முதல்வர் விஜய் வீசிய ‘அணுகுண்டு’!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, அனல் பறக்கும் அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. “யார் இந்த ரத்தீஷ்? நமது அரசு அமைந்த பிறகு இவர் ஏன் துபாயில் போய் ஒளிந்து கொண்டார்?” என்று விஜய் எழுப்பிய கேள்விக்கு முன்னால், திமுக தரப்பு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது.

ரத்தீஷ் ராஜ் சண்முகவேல், அல்லது ரத்தீஷ் வேலு என்று அறியப்படும் இந்த நபர், கடந்த திமுக ஆட்சியில் ஒரு “அங்கீகரிக்கப்படாத பவர் புரோக்கராக” (Unauthorized Power Broker) வலம் வந்தவர் என்பதுதான் இப்போது தமிழகத்தையே அதிரவைக்கும் உண்மை.

ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தீஷ், திமுக குடும்பத்திற்கு, குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார். எந்தவொரு அதிகாரப்பூர்வ பொறுப்பிலும் இல்லாத இவர், மாவட்ட வருவாய் அதிகாரிகளின் இடமாற்றம் முதல் டாஸ்மாக் நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்துள்ளார்.

அமலாக்கத்துறையின் அறிக்கையின்படி, அப்போது டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி கூட ரத்தீஷின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட்டுள்ளார். டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர்களில் முறைகேடு, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருடன் இணைந்த நிதி மோசடிகள் என ரத்தீஷைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள ஊழல் வலைகள் மிக நீளமானவை.

அமலாக்கத்துறை சோதனைகளுக்குப் பிறகு திமுகவின் அரசியல் பிம்பம் சிதைந்து வரும் நிலையில், கே.என். நேரு தொடர்புடைய நகராட்சி நிர்வாகத் துறை ஊழல்களிலும் ரத்தீஷின் பெயர் அடிபடுவதால், அவர் மீதான பிடி எந்நேரமும் இறுகலாம்.

துபாயில் பதுங்கியிருக்கும் இந்த ‘நிழல்’ அதிகாரம் மீட்கப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்படும்போது, தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத பல ரகசியங்கள் உடைக்கப்படும். தவெக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன், திமுக-வின் எதிர்காலத்தையே ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது!

Related News

Latest News