தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்கள் யார்?

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

திமுகவின் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அதிமுக தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பாமக அன்புமணி, தேமுதிக எல்.கே. சுதீஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தம்பிதுரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும், அதில், இருமுறை மக்களவை துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளார்.பாமகவின் அன்புமணி 3-வது முறையாக தேர்வாகவுள்ளார். இவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

Related News

Latest News