வெள்ளை நிற சிங்கக் குட்டி

186
Advertisement

ஸ்பெயின் நாட்டில் உள்ள விலங்கினக் காப்பகத்தில் ஒரு ஆண் சிங்கக் குட்டியும் ஒரு பெண் சிங்கக் குட்டியும் வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளன.

மரபணு ரீதியாக மிக அரிதானதாகக் கருதப்படும் இந்த இரண்டு சிங்கக் குட்டிகள் தென்னாப்பிரிக்காவின் கிரேட்டர் திம்பாவதி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவை.
தற்போது பிறந்துள்ள இந்த இரண்டு வெண்ணிற சிங்கக் குட்டிகளும் குழந்தையைப்போல தனியறையில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பிறந்து சில நாட்களேயான அவற்றுக்கு சிம்பா என்றும், லிரா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மனிதக் குழந்தையைப்போல, அவற்றுக்குப் புட்டிப்பால் புகட்டப்படுகிறது. தொட்டிலில் இடப்பட்டுப் பராமரிக்கப்படும் அவையிரண்டும் விரைவாக வளர்ந்து வருகின்றன.

Advertisement

இதுவரை உலகில் வெள்ளை நிற சிங்கங்கள் 13 மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை நிற அரிய சிங்கக் குட்டிகள் காண்போரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.