பொது தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்து வரும், இந்த சூழலில் +2 தேர்வு முடிவுகள் முடிவுகள் கடந்த மே 8 ம் தேதி வெளியானது.
அதில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 4,61,000 மாணவிகளும், 3,47,000 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் நாளை மறுநாள்(மே 20) 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
அதேபோல், கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
