தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சிவசங்களர் விளக்கம் அளித்துள்ளார்.
மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், வீடுகளில் மின்வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.