இன்றைய காலத்தில் மொபைல் ஃபோன் என்பது நம் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரதான Gadjet-ஆகிவிட்டது. அழைப்புகள், புகைப்படங்கள், வங்கி விவரங்கள், சமூக ஊடக தகவல்கள் என அனைத்தும் இதில் சேமிக்கப்படுகின்றன. ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காவல்துறைக்கு உங்கள் மொபைலை பரிசோதிக்கும் சட்டபூர்வமான அதிகாரம் உள்ளது.
முதலாவதாக, குற்றப்புலனாய்வு நடவடிக்கைகளில் மொபைல் முக்கிய சான்றாக கருதப்படலாம். உதாரணமாக, கொலை, திருட்டு, சைபர் குற்றங்கள், மோசடி போன்ற வழக்குகளில் தொடர்புடைய சாட்சியங்களைத் தேட காவல்துறை மொபைலை சோதிக்கலாம்.
இரண்டாவதாக, அரசு உத்தரவு அல்லது நீதிமன்ற ஆணை இருந்தால், காவல்துறையினர் நேரடியாக உங்கள் மொபைலைக் கைப்பற்றி அதிலுள்ள தகவல்களை பரிசோதிக்கலாம். இது பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாத விசாரணை போன்ற முக்கிய வழக்குகளில் செய்யப்படுகிறது.
மூன்றாவதாக, பொதுவான சோதனை நடவடிக்கைகளில் அதாவது Check post, vehicle checking போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை உங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரிக்கலாம். ஆனால், வெறுமனே சந்தேகம் மட்டுமே காரணமாக உங்கள் மொபைலைக் கைப்பற்றி சோதிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. சட்டப்படி, அதற்கு முறையான காரணம் அல்லது மேல் அதிகாரியின் உத்தரவு இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக, காவல்துறை உங்கள் மொபைலைக் கைப்பற்றினாலும், உங்களது தனியுரிமையை காக்கும் சட்டங்களும் இந்தியாவில் அமலில் உள்ளன. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் படி, குடிமக்களின் தனியுரிமை அடிப்படை உரிமையாகும்.
அதனால், காவல்துறைக்கு உங்கள் மொபைலைப் பரிசோதிக்கும் அதிகாரம் இருக்கிறது, ஆனால் அது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்.
