டீசல் விலை உயரப்போகிறதா? இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…

ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்தது. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், சர்வதேச சூழல் காரணமாக விரைவில் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை விட டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் மோதலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரஷ்யா-உக்ரைன் மோதலால் ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் டீசல் உற்பத்தி குறைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜசான் சுத்திகரிப்பு நிலையமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு ரஷ்யா பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு 2027 ஜனவரி இறுதி வரை கட்டுப்பாடு விதித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டீசல் கையிருப்பும் குறைந்துள்ளது. இதனால் உலக சந்தையில் தட்டுப்பாடு தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் டீசல் விலை உயர்ந்தால், லாரி மற்றும் பேருந்து போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதன் தாக்கமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரலாம். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.78-க்கும், டீசல் ரூ.99.56-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News