Saturday, December 6, 2025

வேற லெவல் Updates-களை கொண்டுவரும் வாட்ஸ்அப்! ‘அரட்டை’க்கு Tough கொடுத்து மிரளவிடுமா?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கவர்ந்துள்ள மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் நீண்டகாலமாக முன்னிலை வகித்து வருகிறது. அறிமுகமான சில மாதங்களிலேயே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற வாட்ஸ்அப், பல போட்டி செயலிகள் வந்தபோதிலும் தனது தனித்தன்மையை இன்றளவும் தக்கவைக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ‘அரட்டை’ செயலி வாட்ஸ்அப்பிற்கு சவால் விடுத்தாலும், வாட்ஸ்அப் அதன் பிரபலத்தைக் குறைக்காமல் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பல வசதிகளை சேர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. விரைவில் இவை பயனாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அம்சங்களை பயன்படுத்துவதற்கு பயனாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியை ப்ளே ஸ்டோர் அல்லது App ஸ்டோரில் அப்டேட் செய்திருப்பது அவசியம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய அப்டேட்டில், ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தங்களின் மோஷன் போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் Chat-டில் பகிரும் வசதி பெறுகின்றனர். அதேபோல், iOS பயனாளர்களுக்கு லைவ் போட்டோக்களை ஸ்டேட்டஸாக பகிரும் புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது.

மேலும், வாட்ஸ்அப்பில் Chat செய்யும் போது, உரையாடல்களை தானாக மொழிபெயர்க்கும் வசதி சேர்க்கப்படுகிறது. அதோடு, குழு சாட்டில் ஒரு குறிப்பிட்ட செய்திக்கு பதிலாக வீடியோ நோட்ஸ் அனுப்பும் அம்சங்களும் Threaded Replies அம்சங்களும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்த புதிய வசதிகள் பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என வாட்ஸ்அப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News