தங்கம் வாங்கப் போறீங்களா? ரூ.50,000க்கு கிடைக்கும் தங்கத்தின் அளவு இதுதான்!!

தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், உங்களிடம் ரூ.50,000 இருந்தால் தற்போதைய தங்கம் விலையில் எவ்வளவு தங்கம் வாங்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,357-க்கும், 10 கிராம் ரூ.1,43,570-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,768 ஆக உள்ளது.

ரூ.50,000 பட்ஜெட்டில் 22 கேரட் நகையை 12 சதவீதம் செய்கூலி மற்றும் சேதாரம், 3 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வாங்கினால் சுமார் 3.29 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும். 24 கேரட் தங்க நாணயமாக வாங்கினால் 5 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து சுமார் 3.22 கிராம் வாங்க முடியும். 18 கேரட் நகையாக வாங்கினால் சுமார் 4.02 கிராம் கிடைக்கும்.

தங்கம் வாங்கும்போது அதன் அடிப்படை விலையுடன் செய்கூலி, சேதாரம் மற்றும் 3 சதவீத ஜிஎஸ்டி ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். செய்கூலி அதிகரிக்கும்போது வாங்கக்கூடிய தங்கத்தின் அளவும் குறையும். எனவே, நகை வாங்குவதற்கு முன்பு பல கடைகளின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

Related News

Latest News